pm kisan திட்டத்தில் ரூபாய் 8000 பெற விவசாயிகளுக்கு ஒரு அறிய வாய்ப்பு

pm kisan scheme latest news– 2019 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஓர் திட்டம் தான் இந்த பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு இலவசமாக உதவித்தொகை வணங்குகிறார்கள். இந்த தொகையை எவ்வாறு பெறுவது என்று பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள விதிமுறையின்படி விவசாயிகள் சொந்தமாக நிலம் வைத்திருந்தால் இந்த உதவி தொகையை பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். இந்த உதவி தொகயானது ஆண்டிற்கு மூன்று தவணையாக கொடுக்கப்பட உள்ளார்கள்.
ஓராண்டுக்கு 12 மாதங்களின் கீழ், நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூபாய் 2000 விதம் ஆண்டிற்கு ரூபாய் 6000 விவசாயிகளின் வங்கி கணக்கு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. சென்ற 2022 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் இருந்து மார்ச் 2023 வரை உள்ள காலத்தில் 13-வது தவணை தொகையை ஜனவரி இறுதியில் விடுவிப்பதற்காக மத்திய அரசு ஆயுதப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எனவே இந்த உதவி தொகை பெற pm கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த(e-KYC) வங்கி கணக்கு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்த விவசாயிகளுக்கு மட்டுமே இத்தவனைத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக கூறியுள்ளது. எனவே மேலே கூறியுள்ள விதிமுறையின் படி ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது. எனவே விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை எவ்வாறு உறுதி செய்யலாம் அதாவது (e-KYC-யில் ) தங்களது ஆதார் எண்ணை எவ்வாறு உறுதி செய்யலாம் என்பதை குறித்து தொடர்ச்சியாக பார்க்கலாம் வாருங்கள்.
உதவித்தொகையை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை எப்படி உறுதி செய்வது?

pm kisan வலைத்தளத்தில் ஆதார் எண்ணை(e-kYC) உறுதி செய்ய விவசாயிகள் இரண்டு முறையில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்ய முடியும். அது எப்படி செய்வதென்று தொடர்ந்து பார்ப்போம்.
விவசாய மக்களே உங்கள் ஊரில் அருகில் இருக்கும் e பொது சேவை மையத்திற்கு சென்று உங்களது கைரேகையை பதிவு செய்வதன் மூலம் உங்கள் ஆதார் எண்ணை உறுதி செய்ய முடியும்.
அல்லது வீட்டிலிருந்தபடியே pm கிசான் வலைத்தளத்திற்கு சென்று உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியில் பெறப்படும் நான்கு இலக்க(OTP) என்னை உள்ளீட்டு செய்தோ உங்களது ஆதார் எண்ணை உறுதி செய்ய முடியும்.
மேலும் பி எம் கிசான் பற்றி சில தகவல்கள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து தகுதியில்ல விவசாயிகளும் சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு சென்று தங்களது வங்கி கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மேலும் இதைப் பற்றி சந்தேகம் இருந்தால் உங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகவும்.
|