2 பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள் மற்றும் பயன்கள்|ponnanganni keerai

0
44
பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணிக் கீரை குழந்தை பருவத்தில் கொடுக்க வேண்டிய மற்றும் பழக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு கீரை வகையாகவும். பொன்னாங்கண்ணி கீரை இன்றைக்கு பெரிய அளவில் யாரும் அன்றாடம் பயன்படுத்துவதில்லை. நம் முன்னோர்கள் அனைவரும் இந்த பொன்னாங்கண்ணி கிரியை உணவாக பயன்படுத்தி வந்தார்கள். அதனால்தான் அவர்கள் 80 வயதிற்கு மேல் மற்றும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு இந்த பொன்னாங்கண்ணி கீரை எப்பொழுதாவது கிடைக்கக்கூடிய அளவில் மாறிவிட்டது.
பொன்னாங்கண்ணி கீரை
இந்த பொன்னாங்கண்ணி கீரை நம் உடலுக்கு மிக மிக முக்கியமான தேவைகளை மற்றும் சத்துக்களை கொடுக்கக்கூடிய கீரை வகையாகும். பண்டைய காலத்தில் நம் தமிழர்கள் இந்த பொன்னாங்கண்ணி கீரையை – பொன் ஆம் காண் நீ என்று உச்சரித்திருக்கிறார்கள். ஏன் இந்த கீரைக்கு இந்த பெயர் வைத்தார்கள் என்றால், இந்த கீரையை சாப்பிட்டால் உடல் தங்கம் போல் மினுமினுக்கும் என்று இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். அக்காலத்தில் இந்த கீரையை மருத்துவத்தில் மிக உயரிய மருந்தாக பயன்படுத்தி இருக்கிறார்கள்

பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்:

இந்த பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டால் நம் உடலுக்கும் மற்றும் மிக முக்கியமாக நம் கண்களுக்கு அதிக அளவில் சத்துக்களை கொடுக்கக்கூடிய ஒரு அருமையான கீரை வகையாகவும். இந்த பொன்னாங்கண்ணி கீரையை சிறு குழந்தைகளுக்கு குழந்தை பருவத்திலிருந்து அவர்கள் சாப்பிடும் உணவில் இந்தக் கீரையை கட்டாயம் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகள் சிறுவயதில்  கண்ணாடி போடக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவற்றை தடுக்க இந்த பொன்னாங்கண்ணி கீரை மிக முக்கியமானதாக பயன்படுகிறது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி நீங்களும் உங்கள் அன்றாட உணவு முறையில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்தக் கறியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்கு ஆரோக்கிய மற்றும் சத்துக்கள் கிடைக்கும்.

பொன்னாங்கண்ணி கீரையின் சிறப்பு அம்சங்கள்

பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் கண் பார்வை நல்ல பொழிவுடன் இருக்கும். அதேபோல் கண் பார்வை மங்கியவர்கள்  இந்தக் கீரையை கட்டாயம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். ஏனென்றால் இந்தக் கீரையில் கண்களுக்கு தரக்கூடிய நிறைய சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. எனவே இதை நீங்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் மங்கிய கண் பார்வை நன்றாக குணமாகும். அதேபோல் இந்த கீரையின் சாரை எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் என்னையே சேர்த்து அதை காட்சி அந்த எண்ணையை தலைக்கு தேய்த்து குளித்தால் உங்களின் உடல் சூட்டு தன்மை குறையும் மற்றும் கண் பார்வை நன்றாக தெரியும்.
பொன்னாங்கண்ணி கீரை
அக்காலத்தில் இந்த பொன்னாங்கண்ணி கீரைக்கு ஒரு பழமொழி உண்டு
                  போன கண்ணு திரும்புமாம் பொன்னாங்கண்ணி கீரையால
அந்த அளவுக்கு இந்த பொன்னாங்கண்ணி கீரை சத்தி நிறைந்திருக்கின்றது. இன்றைக்கு தைலங்கள் நாம் நிறைய பயன்படுத்துகிறோம். அந்த தைலத்தில் இந்த பொன்னாங்கண்ணி கீரையும் பங்களிக்கிறது.
கீரை வகைகளின் நிறைய கீரைகள் உண்டு. மற்ற கீரைகளோடு ஒப்பிடும்போது இந்த பொன்னாங்கண்ணி கீரையில் சத்து அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இந்த பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதன்  மூலம் உடல் குளிர்ச்சியாகவும் கண் பார்வை நன்றாக பொலிவுடன் தெரியவும் பயன்படுகிறது.
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்
இந்த சிவப்பு பொன்னாங்கன்னி கீரையில் ஒரு சிறப்பான அம்சம் உண்டு. எந்த ஒரு பொருள் சிவப்பு நிறத்தை கொண்டு இருக்கின்றது அதற்கு பிரத்யோகமான ஒரு பலன்கள் உண்டு. இந்த சிவப்பு பொன்னாங்கன்னி சாப்பிடுவதன் மூலம் இரத்த கொதிப்பு, மாரடைப்பு, சர்க்கரை வியாதி ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த மருந்தாக இந்த சிவப்பு பொன்னாங்கண்ணி திகழ்கிறது.
கீரைகளை நீங்கள் உங்கள் வீட்டிலேயே வளர்த்து அதை சமைத்து சாப்பிட்டு வந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் சந்தையில் வாங்கும் கீரை எங்கிருந்து கொண்டு வருவார்கள் என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் உங்கள் வீட்டிலேயே வளர்த்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலுக்கு இன்னும் கூடுதல் பயன்களை கொடுக்கும். எனவே கீரை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் சத்தும் கிடைக்கும். கீரைகளை சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக உங்கள் வாழ்க்கையை தொடருங்கள்.
Health Tips in tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here