இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு/ India post recruitment 2022

0
21
India post recruitment 2022

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2022\India post recruitment 2022:

இந்திய தபால் அலுவலகம் பல்வேறு அஞ்சல் வட்டம் மற்றும் அஞ்சல் பிரிவுகளில் உள்ள தபால்கார்(postman) பதவியை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது(India post recruitment 2022). இந்த தபால்கார் பதவிக்கு இந்தியா முழுவதும் மொத்தமாக  59099  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த அஞ்சல் துறை தபால்கார் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி  தேதியானது விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளது. எனவே இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்கள். எனவே இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கான ஆன்லைன் இணைப்பை செயல்படுத்திய பின்பு இதற்கு தகுதியான இந்திய குடிமக்கள் இந்த அஞ்சல் அலுவலக காலி இடத்திற்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும்  இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் போது வயது சான்று, கல்வி தொகுதி, அனுபவ சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைத்து இருக்க வேண்டும் கூறியுள்ளார்கள். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பில் தேர்ந்தெடுக்கும் முறையானது  Written test, Interview,  Merit list  போன்ற அடிப்படை தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்வையிடவும்(www.indiapost.gov.in).

 

India post recruitment 2022
இந்தியா தபால் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்|India post recruitment 2022:
நிறுவனம்:                       இந்திய தபால் துறை
பணி:                              போஸ்ட்மேன்(postman)
மொத்த காலியிடம்:         59099
ஊதியம்:                         Rs. 21700 – Rs. 69100
பணியிடம்:                     இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி
தேதி:                              விரைவில் அறிவிக்கப்படும்
அதிகாரப்பூர்வ 
இணையதளம்:                www.indiapost.gov.in.
கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
குறைந்தபட்சம் வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 27 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
தபால் துறைக்கு தேர்ந்தெடுக்கும் முறை:
Writer test, interview, merit list ஆகிய அடிப்படை தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்திய தாபல்துறை வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை:
  • indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • சென்ற பின் அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போஸ்ட்மேன்(postman) பணிக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  • அதில் இருக்கும் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்தவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
jobs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here