Summer beauty tips in Tamil – அழகு குறிப்புகள்

0
321
summer beauty tips

Summer beauty tips- கோடைக்காலத்தில் உங்கள் சருமத்தை அழகாக வைத்திருக்க டிப்ஸ்

summer beauty tips
pothunalam.in

 summer beauty tips- வணக்கம் டியூட்ஸ் வெயில் காலம் வந்துவிட்டது, எனவே கோடை காலம் வந்தாலே நம்மால் வெயில் தாங்க முடியாது. இந்த வெயில் காலத்தில் முதலில் பாதிப்படைவது நம்முடைய சருமம்தான். நாம் அதிகம் வெயிலில் வேலை பார்ப்பதால் நம்முடைய சருமம் அதிக கருமைக்கு உள்ளாகும். இந்த வேலை காரணமாக சில பேருக்கு முகத்தில் பருக்கள் வரும், அதோடு மட்டுமல்லாமல் அந்தப் பரு கரும்புள்ளியாக மாறிவிடும். வெயிலின் தாக்கத்தால் ராஷஸ், அரிப்பு மற்றும் சர்மத்தின் தோல் சிவந்து போதல் இது மாதிரியான பல சருமப் பிரச்சனைகள் கோடைகாலத்தில் ஏற்படுவது வழக்கமாகும். இதற்காக நாம் கடைகளில் இருக்கக்கூடிய பல கிரீம் வகைகளை பயன்படுத்தியும் நம் முகத்தில் ஒரு மாற்றமும் தெரியாது போல் இருக்கும். எனவே உங்களின் முகத்தை வெயில்காலத்தில் புத்துணர்ச்சியாகும், பொலிவுடனும் வைத்திருப்பதற்கு சில எளிமையான குறிப்புகளை இந்த பதிவில் பதிவிட்டு உள்ளோம். அவற்றைப் படித்து இந்த கோடைகாலத்தில் நீங்கள் உங்கள் சருமத்தை அழகாக வைத்திருக்க கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை ட்ரை பண்ணுங்க. இப்ப வாங்க டிப்ஸ் என்னன்னு பார்ப்போம்.

Summer beauty tips– கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் அனைத்தையும் பயன்படுத்துங்க

1) தேன்

summer beauty tips

சில பேருக்கு அவர்களின் முகத்தில் பரு வந்தால் அந்தப் பருவானவை அப்படியே கரும்புள்ளியாக மாறிவிடும். அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் முகம் அழகையே கெடுத்துவிடும். எனவே உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நிரந்தரமாக நீக்குவதற்கு சுத்தமா தேனை முகத்தில் தடவி விட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் கருமையான முகம் வெண்மையாக மாறக்கூடும்.

2) ஜாதிக்காய் தோல், சந்தனத்தூள்

summer beauty tips

உங்களின் முகம் வெண்மை நிறமாக மாற்றுவதற்கு ஜாதிக்காய் தூள் உடன் சம அளவிற்கு சந்தனத்தூள் மற்றும் கஸ்தூரி மஞ்சள் தோல் சேர்த்து ஒரு பேஸ் வாஷ் பேக் தயாரிக்கவேண்டும். தயாரித்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவிவிட்டு 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நீங்கும் அதுமட்டுமல்லாமல் வெயில் காலத்தில் முகம் பலபலவென்று காணப்படும்.

3) வெள்ளை தாமரை இதழ்

summer beauty tips

சில பெண்கள் நல்ல வெண்மையான நிறத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களின் கண்களின் கீழ்ப்பகுதியில் கருமை நிறத்தில் இருக்கும். அதனால் அவர்களின் சருமமே அழகில்லாத போல் இருக்கும். இதனால் கோடை காலங்களில் கண் தோல் வரண்டு போய் அவர்களின் சருமம் அழகாக இருக்காது. இதனைப் போக்க வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்துக்கொண்டு இதோடு 10ml விளக்கெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை ஒரு பாக்ஸில் சேமித்து வைத்துக் கொள்ளவும். பின் தேவைப்படும் போதெல்லாம் கண்களில் இதனை தடவி சிறிது நேரம் காத்திருக்கவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். உங்கள் கண்களின் கீழ் பகுதியில் உள்ள கருமை நிறம் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

4) கிர்ணி பழம்

summer beauty tips

கிர்னி பழத்தில் ஒரு சிறிய துண்டினை எடுத்து உங்களின் கைகளால் நன்றாக வாசித்துவிட்டு ஒரு ஃபேஸ் பேக் போல் உங்களின் சருமத்தில் தடவவும். தடவிய பின் சிறிது நேரம் காய வைக்க வேண்டும். காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி பின் உங்களின் முகத்தை பார்த்தாள் பளிச்சென்று இருக்கும்.

FACE BEAUTY TIPS

5) முல்தானி மட்டி பவுடர், தயிர்

summer beauty tips

வெயில் காலத்தில் இவளின் முகம் வழவழப்பாகவும் மற்றும் மென்மையாகவும் இருப்பதற்கு ஒரு கிண்ணத்தில் முல்தானி மட்டி பவுடர் சிறிதளவு மற்றும் அதனுடன் பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து ஃபேஸ் பேக் ஒன்றை தயாரிக்க வேண்டும். தயார் செய்த பின் அந்த ஃபேஸ் பேக்கினை உங்களின் முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்த பின் குளிர்ந்த நீரால் உங்களின் முகத்தை கழுவி விடவும். கழுவிய பின் உங்களின் முகத்தை பார்த்தால் பளிச்சென்று இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here