சமையல் குறிப்பு- cooking 1tips (அரிசி உப்புமா)

0
434
சமையல் குறிப்பு

சமையல் குறிப்பு- அரிசி உப்புமா செய்வது எப்படி

சமையல் குறிப்பு

இந்த சமையல் குறிப்பு வேலைக்கு செல்லும் அனைவருக்கும் காலை உணவு தனியாக செய்வதற்கும் மற்றும் மதிய உணவு தனியாக செய்வதற்கும் அவர்களுக்கு போதுமான மணி நேரம் இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு என்ன சமையல் குறிப்பு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன சமையல் குறிப்பு என்று கேட்கிறீர்களா? அது வேற ஒண்ணும் இல்லைங்க அரிசி உப்புமாங்க. இந்த உப்புமாவை எளிய முறையிலும் சிறிது நேரத்திலும் செய்து முடித்துவிடலாம். வாங்க நண்பர்களே இந்த அரிசி உப்புமாவை எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்.

அரிசி உப்புமா செய்வதற்கு- தேவையான பொருட்கள்

முதலில் எண்ணெய் 4 ஸ்பூன்

இரண்டாவது கடுகு 1 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்

நான்காவது கடலைப்பருப்பு 2 ஸ்பூன்

ஐந்தாவது பச்சைமிளகாய் 2 நறுக்கியது

ஆறாவது கருவேப்பிலை சிறிதளவு

மேலாவது வெங்காயம் மீடியம் அளவு 2 நறுக்கியது

எட்டாவது தண்ணீர் 4 டம்ளர்

ஒன்பதாவது கேரட் பீன்ஸ் 5 நறுக்கியது

அதாவது உப்பு தேவையான அளவு

11வது பச்சரிசி 2 கிளாஸ்( ஊர வைத்தது)

அரிசி உப்புமா- செய்முறை விளக்கம்

சமையல் குறிப்பு

முதலாவது

முதலில் அடுப்பைப் பற்றவைத்து அதன்மேல் குக்கரை வைத்து எடுத்து வைத்த 4 ஸ்பூன் எண்ணெயை சேர்த்து பின்பு எண்ணெய் காய்ந்தவுடன் எடுத்து வைத்த கடுகு சேர்க்கவும்

இரண்டாவது

கடுகு நன்றாக பொரிந்தவுடன் எடுத்து வைத்துள்ள கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பினை கடுகுடன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை காத்திருக்கவும்.

மூன்றாவது

பொன்னிறமாக வந்த பிறகு இதனுடன் எடுத்து வைத்துள்ள சிறிதளவு கறிவேப்பிலை, நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் மற்றும் 2 மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.

நான்காவது

அதன் பிறகு மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து அரிசி உப்புமாவுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

ஐந்தாவது

வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியபின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் எடுத்து வைத்துள்ள கேரட் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

ஆறாவது

பின்பு பத்து நிமிடம் ஊறவைத்த பச்சரிசியை இதனுடன் சேர்க்கவும். சேர்த்த பின் ஒரு நிமிடம் கிண்டவும். இந்திய பெண் 2 கிளாஸ் பச்சரிசிக்கு 4 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

ஏழாவது

அடுத்ததாக கொதிக்க வைத்துள்ள தண்ணீரை குக்கரில் வேகின்ற சாதத்துடன் ஊற்றி கொதிக்க தொடங்கியதும் 2 விசில் வைக்கவும்.

இறுதியாக

இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அனைத்து விட்டு சிறிது நேரம் கழித்து மூடியை திறக்கவும். இதோ அரிசி உப்புமா ரெடி ஆயிடுச்சுங்க.

weight loss foods

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here