Cooking tips in Tamil- விரால் மீன் குழம்பு எப்படி செய்வது

நண்பர்களே இன்றைய cooking tips in Tamil நாம் பார்க்கப் போகிற சமையல் குறிப்பு சூப்பரான மற்றும் அருசுவையான விரால் மீன் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம். நம் எல்லோருக்கும் மீன் குழம்பு என்றாலே மிகவும் பிடிக்கும். ஏனெனில் ஒவ்வொரு மீன்களிலும் பல பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் விராலி மீன் குழம்பு என்றாலே தனி சுவை தான். ஏனென்றால் இந்த மீனின் குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும் மன்றம் இந்த மீனில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே விரால் மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
Cooking tips விரால் மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
விரால் மீன் கிலோ-1/4
தேவையான சின்ன வெங்காயம்- 50 கிராம்
தேவையான தக்காளி- 2
தேவையான புளி- சிறிதளவு
துருவிய தேங்காய்- கால் கப்( கட்டாயம் அரைத்து வைக்கவும்)
தேவையான மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்
தேவையான மல்லித்தூள்- 2 டீஸ்பூன்
தேவையான மஞ்சள்தூள்- சிறிதளவு
தேவையான பூண்டு- 10பல்
வறுத்து பொடியாக்கிய வெந்தயம்- 1 டீஸ்பூன்
தேவையான சீரகம்- 1 டீஸ்பூன்
தேவையான உப்பு- உங்களின் தேவைக்கேற்ற அளவு
தேவையான நல்லெண்ணெய்- உங்களுக்கு தேவையான அளவு
தேவையான வெந்தயம்- அரை டீஸ்பூன்
தேவையான கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி- உங்களுக்கு தேவையான அளவு.
விரால் மீன் குழம்பு செய்முறை

Cooking tips:1
முதலில் நீங்கள் எடுத்து வைத்துள்ள விரால் மீனை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு எடுத்து வைத்த புளியை ஊறவைக்கவும்.
அதன்பிறகு நீங்கள் எடுத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவையை பொடியாக ஹரிக்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
cooking tips:2
ஊற வைத்த புளியை எடுத்து அதனை கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
cooking tips:3
ஒரு சட்டியில் உங்களுக்கு தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும். பின்பு என்னை காய்ந்தவுடன் அதில் வெந்தயம், சீரகம் போட்டு வறுக்கவும்.
இவை அனைத்தும் நன்றாக வறுத்த பின் இதனுடன் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வணக்கம்.
cooking tips-4
அதைக் காயத்துடன் எடுத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து தக்காளி குலையும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பின்பு இதில் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பின் அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு இதனுடன் கெட்டியாக கரைத்து வைத்த புளி தண்ணீரை ஊற்றவும்.
பின்பு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் புளிக்க விடவும்.
Healthy foods
cooking tips:4
குழம்பு கொதித்த பிறகு எடுத்து வைத்துள்ள விரால் மீன் துண்டுகளை குழம்பில் போடவும். மீனை குழம்பில் போட்ட பிறகு மிதமான சூட்டில் கொதிப்பு வரும் வரை வைக்கவும்.
விரால் மீன் குழம்பு கொதித்த பிறகு நீங்கள் அரைத்து வைத்த தேங்காய் துருவலை குழம்பில் ஊற்றி ஒரு நிமிடம் கொதித்த பின் இறக்கவும். குழம்பை இறக்கிய பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தலையை மேலே தூவி விடவும்.
இதோ அருமையான மற்றும் அருசுவையான விரால் மீன் குழம்பு ரெடி.
[…] Cooking tips in Tamil […]
[…] (Village cooking Style Fish Curry)-கிராமத்து பாணி மீன் குழம்பு செய்வது எப்படி, இங்கு ஒரு எளிய கிராமத்து பாணி மீன் குழம்பு செய்முறை உள்ளது, இது பொதுவாக அனைத்து இந்திய வீடுகளிலும் காணப்படும் சில அடிப்படை மசாலாக்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த செய்முறை ரோஹு மீன் பயன்படுத்துகிறது; இருப்பினும், அதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் எந்த மீனையும் பயன்படுத்தலாம். மொத்த சமையல் நேரம் 30 நிமிடங்கள் தயாரிப்பு நேரம் 15 நிமிடங்கள் சமையல் நேரம் 15 நிமிடங்கள். […]