Kavithai in Tamil- தமிழ் கவிதை

0
372
Kavithai in Tamil- தமிழ் கவிதை

தமிழ் கவிதை-Kavithai in Tamil

kavithai in tamil

 

நம் எல்லோருக்கும் அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். அம்மா யாருக்குத்தான் பிடிக்காது. என்னதான் சண்டை போட்டாலும் நம்மை அடித்தாலும் நம்மை அரவணைக்கும் ஒரே குணம் நம் அம்மா மட்டும்தான். ஏனென்றால் இந்த உலகத்திற்கு நம்மை அறிமுகம் செய்து வைத்த முதல் குரு நம் அம்மா. அப்பேர்பட்ட அம்மாவுக்காக தமிழ் கவிதை வரிகள் kavithai in Tamil.

 

தமிழில் அம்மா கவிதை

kavithai in tamil

 

 

நான் அழுத போதெல்லாம் என்னை சிரிக்க

வைத்த ஒரே முகம் என்னை என்றுமே வெறுக்காத 

ஒரே குணம் என் தவறுகளை அனைத்தும் மன்னிக்கும் 

ஒரே குணம் என் மேல் அளவு கடந்த பாசம் வைக்கும் 

ஒரே குணம் மற்றவர்கள் என்னிடம் காட்டாத நேசன் 

இவை அனைத்தையும் உன்னிடம் கண்டேன் அம்மா.

 

நான் அழுவதற்கு கண்கள் என்ன அணைப்பதற்கு

கைகள் நான் கலங்கும் போதெல்லாம் எனக்கு

ஆற்றல் தரும் ஒரே குணம் உடையவர் நான்

சோகமாய் இருக்கும் நேரங்களில் நான் 

சாய்ந்துகொள்ள என் தாயின் மடி போதும்.

 

தோட்டத்தில் வளரும் பூக்கள் தோட்டத்திற்கு அழகு. 

வானத்திலிருந்து பெய்யும் மழை வானத்திற்கு அழகு. 

என்னை உருவாக்கி என்னை நல்ல வழியில் வழி நடத்திச் 

சென்றதற்கு என் அம்மாவுக்கு தான் அழகு.

 

நான் பிறந்த வாழ்ந்த நேரத்தில் நான் கூறிய

முதல் சொல் நான் கூறிய முதல் வார்த்தை நான் 

கோரிய முதல் கவிதை அம்மா. அதேபோல் நான் 

இருக்கும் வரை நான் கடைசியாக உன் சொல்ல 

விரும்பும் ஒரே சொல் அம்மா என்னும் உன் பெயரை.

 

அம்மா எனக்கு நீ உயிர் தந்து என்னை வளர்த்த

உன் உன்னதமான அன்பை என் உயிர் உள்ளவரை 

என்றும் மறக்க மாட்டேன் என் அம்மா.

 

அப்பா கவிதைகள்

 

kavithai in tamil

 

அப்பா என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானவர். நம்மிடம் முதலில் நண்பனாக பழகும் ஒரே மனிதன் அம்மா அப்பா. நம்மை அனைவரையும் போதும் யாரிடமும் விட்டுக் கொடுக்காமலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடாத ஒரே குணம். இப்பேர்பட்ட மனிதனுக்கு ஒரு சில அழகு கவிதை வரிகள் kavithai in Tamil.

 

தமிழில் அப்பா கவிதை

 

செதுக்கப்பட்ட ஒவ்வொரு சிலையும் 

சிற்பங்கள் மட்டும் தெய்வங்கள் என்றால்

எனக்கு எப்போதும் சிற்பமாகவும் மற்றும் 

தெய்வங்களாகவும் தெறிகின்றவர் என் அப்பா.

 

கண்ணில் கோபத்தையும் என்மேல் 

அளவுகடந்த பாசத்தையும் என்மேல் 

அக்கறையும் வைத்திருக்கவும் ஒரே உறவு என் அப்பா.

 

இறைவா உன்னிடம் ஒரு வேண்டுகோள் 

என்னை குழந்தையாகவே மாற்றிவிடு 

என்றாள் நான் என் அப்பாவின் செல்லப் 

பிள்ளையாகவே நான் வாழ்ந்து விடுகிறேன்.

 

அம்மாவின் வயிற்று கருவறை பாக்கியமும்

அப்பாவின் மார்பு கருவறை பாக்கியமும்

என் வாழ்நாளில் என்றுமே தீர்க்கமுடியாத கடன்கள்.!

 

அப்பா மகள் கவிதை

 

kavithai in tamil

 

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவுகளை கொண்டாடும் வகையில் ஒரு சில கவிதை வரிகள் kavithai in Tamil.

 

தமிழில் அப்பா மகள் கவிதைகள்

 

அப்பா நான் தலை சாய்ந்து தூங்க 

தாய்மடி தேவையில்லை….! உன் தோளே போதும்

ஏனென்றால் அதுவே எனக்கு சொர்க்கம்தான்.

 

எனக்கு என்னென்ன தேவையான நான் 

சொல்லத் தேவையில்லை. எனக்கு தானாக 

வந்துவிடும் என் கைகளுக்குள் நான் கண் 

அசைத்தால். ஏனென்றால் என்னை முழுமையாக 

அறிந்த என் அப்பா எனக்கு அனைத்தையும் செய்வார்.

 

நான் வானளவு வெற்றிகொண்ட ஒரு 

மனிதனாக இருந்தாலும் எனது கைகளுக்குள் 

அவர் என்றுமே எனக்கு விளையாட்டு பொம்மை தான்.

 

ஆண் ஆண் பிள்ளையாக இல்லை 

என்றாலும் எப்போதுமே நான்தான் 

அவரது முதல் வாரிசு எனக்கு பிறகு 

தான் எல்லாமே இங்கு அவருக்கு

 

என் அப்பா யார் சொல்லுக்கும் 

கட்டுப்படாத அவரது செவிகள் என் 

சொல்லுக்கு மட்டுமே என்றும் கட்டுப்பட்டு நிற்கும்.

 

என் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் 

எதுவாக இருந்தாலும் என்னுடன் நிழல் 

போல கூடவே கும்மென்று என்னை 

காக்கும் குடை எனது அப்பா மட்டுமே.

 

பெண் பிள்ளைகள் தன் அப்பாவின் மேல்

 அதிக பாசம் வைக்க ஒரே காரணம் 

தன்னை ஒருபோதும் ஏமாற்ற நினைக்காத

 ஒரே தந்தை என்பதால்.

 

அப்பா மகன் கவிதை

kavithai in tamil

 

 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசத்தினை விலக்கும் ஒரு சில தமிழ் கவிதை வரிகள் kavithai in Tamil.

 

தமிழில் அப்பா மகன் கவிதைகள்

 

உன் அம்மாவின் கருவறையில் குழந்தையட நீ 

உனக்காக காத்திருக்கும் குழந்தையடா நான். 

நீ கருவறையில் உன் கால்களால் துள்ளி ஆடுவதை 

பார்த்த என் மனம் இங்கே உன்னைப்போல் துள்ளிக் குதிக்கிறேனடா.

 

என்னை தலைக்கு மேல் தூக்கி வைத்து 

அழகு பார்க்கும் என் அப்பாவை ஒருபோதும் 

என்னால் அவரை தலை குனிய விடமாட்டேன்.

 

தந்தையின் இதையும் இறந்தபின் பேச விரும்புவது

kavithai in tamil

 

 

என் உயிரணுவில் உதித்த என் மகனே

கட்டில் சொந்தம் தந்த தொட்டில் சொத்தமடா நீ.

எப்போதும் உன் கண்ணீரை விரும்பாத நான் நீ 

இன்று கண்ணீர் விட்டு கதறியும் உன்னை கண்டு 

கொள்ளாமல் கிடக்கிறேன் காலம் என்னைக் கைது 

செய்ததால் கவலையில் தவிக்கிறேன் நீ இன்று 

உடைந்து போய் நிற்கையில் உன்னருகில் யாருமில்லை 

உனக்கு ஆறுதல் சொல்ல உன்னோட நானும் இல்லை 

நான் என்றும் நேசிக்கும் இதயமடா நீ ஏன் கலங்குகிறாய் 

இதுவரை உன்னை என் மகனாக பார்த்திருந்தேன் 

இனி உன்னை எனது ஸ்தானத்தில் பார்க்க விரும்புகிறேன் 

எதையும் தாங்கும் இதயம் உடையவன் நீ இதயம் தாங்கிக் கொள்

 நான் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் மீண்டும் வருகிறேன் 

உனது மகனாக கலங்காதே மகனே கலங்காதே..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here