சமையல் குறிப்புகள்-Tamil cooking tips

0
427
சமையல் குறிப்புகள்-Tamil cooking tips
Pongal Festival Special dish

தமிழ் சமையல் குறிப்புகள்- Tamil cooking tips:

சமையல் குறிப்புகள்

 

சமையல் குறிப்புகள்: வணக்கம் நண்பர்களே நம்ம இப்போ பார்க்கப் போறது ருசியான மற்றும் மணமான சமையல் குறிப்புகள். உங்கள் நாக்கில் எச்சில் ஊற  வைக்கும் அளவிற்கு நீங்களே அசந்து போகும் படி செய்யக்கூடிய  சமையல் குறிப்புகள் உள்ளன.  இதில் சைவ சமையல் குறிப்புகள், அசைவ சமையல் குறிப்புகள், கிராம சமையல் குறிப்புகள், இனிப்பு வகைகள், கார வகைகள், பலகாரங்கள் மற்றும் பலவிதமான சமையல் குறிப்புகள் பார்க்க போகிறோம்.

நாம் இப்போது பார்க்கப் போகிற சமையல் குறிப்பு இரண்டு வகைப்படும்.

1) தவலை வடை செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம்.

2) அரசு மயான நீர் உருண்டை செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம்.

நம் முதல் சமையல் குறிப்பு தவலை வடை செய்யும் முறை:

சமையல் குறிப்புகள்

 

நாம் பலவிதமான வடை வகைகள் பல அறிந்திருப்போம். அது மட்டுமின்றி வடை என்றாலே நாம் நினைவுக்கு வருவது பருப்பு வடை, மசால் வடை, உளுந்து வடை, ஓட்ட வடை தான். இந்நிலையில் நாம் இப்போது இந்த சமையல் குறிப்பில் பார்க்க போகிற வடை புதுவிதமான வடை, தவலை வடை😁. வாருங்கள் அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தவலை வடை செய்வதற்கு தேவையான பொருட்கள்:

இந்த தவலை வடை செய்ய பத்து விதமான சமையல் பொருட்கள் தேவைப்படும். அவை என்னவென்று ஒன்றொன்றாக பார்ப்போம் வாருங்கள்.

சமையல் குறிப்புகள்

 

முதலில் – உளுத்தம் பருப்பு (100 கிராம்).

இரண்டாவது பயித்தம்- பருப்பு (100 கிராம்).

மூன்றாவது- கடலைப் பருப்பு (100 கிராம்).

நான்காவது- துவரம் பருப்பு (100 கிராம்).

ஐந்தாவது- பச்சை அரிசி (100 கிராம்).

ஆறாவது- கடலை எண்ணெய் (30-40 ml).

ஏழாவது- கடுகு (1 டீஸ்பூன்).

எட்டாவது- பெருங்காயத்தூள் (1 டீஸ்பூன்).

ஒன்பதாவது- உப்பு தேவையான அளவு.

பத்தாவது- துருவிய தேங்காய் (1 மூடி).

தவலை வடை செய்யும் முறை:

 

சமையல் குறிப்புகள்

 

Ø  1)முதலில் நம் மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பருப்பு வகைகள் அவை உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு. ஒரு அரிசி வகை பச்சரிசி. இவை ஐந்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நான்கு மணி நேரம் நன்றாக தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதே சமயத்தில் பருப்புகள் ஊறும்போது 10 சிவப்பு மிளகாய் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

Ø  2)நன்றாக ஊறிய பின் அது நிற்கும் தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு. பின்பு இந்த ஐந்து பருப்புகள் மற்றும் 10 மிளகாயும் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.

Ø  3)பின்பு அடுப்பை பற்றவைத்து வாணலியில் 30 – 40 ml அளவிலான எண்ணையை ஊற்றவேண்டும். அந்த எண்ணெயை நன்றாக சூடு ஆன பிறகு கடுகு சேர்க்க வேண்டும். செர்த்த கடுகு நன்றாக பொறிந்த பின் நான் துருவி வைத்த தேங்காயை இதனுடன் சேர்த்து நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

Ø  4)நன்றாக வருத்தமுடன் நாம் எடுத்து வைத்த ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் அதனுடன் சேர்க்கவும். இவை அனைத்தையும் சேர்த்தபின் மிதமான சூட்டில் நன்றாக வறுத்துக்கொள்ளவும். அவ்வாறு வறுக்கும் போது குமிழிகள் வர ஆரம்பித்துவிடும் அப்போது அடுப்பை அனைத்து விடவும்.

Ø  5)பின்பு நீங்கள் அரைத்து வைத்த மாவில் இப்போது நீங்கள் வறுத்த பொருட்கள் அதாவது, தேங்காய், கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுக்கப்பட்ட பொருட்கள் இதனுடன் சேர்க்க வேண்டும். சேர்த்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சேர்த்த பின் நன்றாக கலக்கவும்.

Ø  6)பின் நீங்கள் உங்கள் கையில் வடை கட்டுவதாக இருந்தால் உங்கள் கையில் தண்ணீர் தடவிக் கொள்ளவும். இல்லை வாழை இலையில் வடை கட்டுவதாக இருந்தால் அந்த இலையில் நெய் தடவிக் கொள்ளவும்.

தவலை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்:

சமையல் குறிப்புகள்

 

Ø  பின்பு வாழை இலையை எடுத்து 2.5 அங்குலத்தில் வட்டவடிவில் செய்து கொள்ளவும். பிறகு ஒரு வடைக்கு தேவையான மாவை எடுத்து வாழையிலையில் வைத்து தவலை வடையை தட்டிக் கொள்ளவும்.

Ø  பின்பு உங்க வீட்ல இருக்கும் ஒரு கடையில் என்னையை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் சூடான பிறகு தட்டி வைத்த வடையை எண்ணெயில் போடவும். என்னையை குறைந்த சுடரில்(low flame) வைத்து 6 முதல் 10 நிமிடம் வரை தவலை வடை வேக வைக்கவும்.

Ø  நன்றாக வேக வைத்த பின் தவலை வடையை எடுத்து சாப்பிட்டு பாருங்கள். உங்கள் நாக்கில் அறுசுவை நடனமாடும். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பகிருங்கள். அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

இதுபோன்ற சுலபமான மற்றும் சுவையான வகையில் சமையல் எவ்வாறு செய்வது என்று பார்க்க நம்ம page (pothunalam.in) ku அடிக்கடி வாங்க. சந்தோஷமா போங்க.

2) இந்த சமையல் குறிப்பில் அறுசுவையான நீர் உருண்டை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

நாம் இரண்டாவதாக பார்க்க போகிற சுவையான சமயல் நீர் உருண்டை சமையல் குறிப்பு. இந்த உருண்டையை சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் நீங்கள் கூட இதை எளிமையாக உங்கள் வீட்டிலேயே செய்யலாம். உருண்டையானது அனைவரும் சாப்பிட்ட பின்பு சீக்கிரம் செரிமானம் ஆகக்கூடிய ஒரு சமையல். இதை நீங்கள் ஒரு முறை செய்து சாப்பிட்டால் மாநாட்டில் இந்த உருண்டையின் சுவை ஒட்டிக்கொள்ளும். இந்த சுவையான நீர் உருண்டையை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

நீர் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:

இந்த நீர் உருண்டை செய்ய தேவைப்படும் பொருட்கள் ஒன்பது வகையானது. அவை என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

முதலில்- இட்லி அரிசி(1/4)

இரண்டாவது- கடுகு(1 ஸ்பூன்)

மூன்றாவது- உளுந்து(1 ஸ்பூன்)

நான்காவது- கடலைப்பருப்பு(1 ஸ்பூன்)

ஐந்தாவது- பெருங்காயத் தூள்( சிறிதளவு)

ஆறாவது- காய்ந்த மிளகாய்(3)

ஏழாவது- கருவேப்பிலை(2 கொத்து)

எட்டாவது- தேவையான அளவு (உப்பு)

ஒன்பதாவது- ஒரு தேங்காய் மூடியில் பாதி சிறிய சிறிய துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

நீ உருண்டை செய்யும் முறை:

Ø  1) நீங்கள் எடுத்து வைத்த இட்லி அரிசியை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

Ø  2) அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியில் சிறிது அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின் கடுகு போடவும் அதனுடன் மிளகாய் மற்றும் நீங்கள் எடுத்து வைத்த உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டினையும் தேனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இவை அனைத்தும் பொன்னிறமாக மாறியதும் எடுத்துவைத்த கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

Ø  3)கடைசியாக பெருங்காயத் தூள் மற்றும் நறுக்கி எடுத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு நீங்கள் கரைத்து வைத்த மாவை எடுத்து இதனுடன் சேர்க்கவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும். நன்றாக வதங்கிய பின் சிறிது நேரம் ஆற வைக்கவும்.

Ø  4)வதக்கிய மாவை ஆற வைத்த பின் மிதமான சூட்டிலேயே உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்.

Ø  5)பின்பு இட்லி பாத்திரத்தை எடுத்து இட்லி எவ்வாறு செய்வது போல் தண்ணீர் ஊற்றி காய வைக்கவும். தண்ணீர் கொதித்த பின் பிடித்து வைத்த உருண்டையை இட்லி தட்டில் வைத்து அவித்து கொள்ளவும்.

Ø  6)பத்து நிமிடம் கழித்து பார்க்கவும் சுவையான மனமான உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் ருசித்து சாப்பிடும் நீளுருண்டை இதோ.

இது போன்ற இன்னும் பல சுவையான சமையல் குறிப்புகள்

தெரிந்துகொள்ள உங்களின் page(pothunalam.in) ku அடிக்கடி வாங்க 

சந்தோஷமா போங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here