motivation quotes in Tamil–ஊக்கமளிக்கும் தமிழ் கவிதைகள்

1
494
motivation quotes in Tamil

 motivation quotes in Tamil–ஊக்கமளிக்கும் தமிழ் கவிதைகள்:

 நம் வாழ்க்கையில் பல முறை தோல்வி அடைந்திருப்போம். அப்போது நம் மனம் மௌனமாகவும் அமைதியாகவும் எதையோ இழந்தது போல் இருக்கும். அந்த சமயம் நம் முகத்தில் சிரிப்பு, சந்தோசம் எதுவும் ஏற்படாது. நாம் எதை இழந்தமோ அதைப்பற்றியே நம் மனம் நினைத்துக் கொண்டே இருக்கும். ஒரு ஒரு கட்டத்தில் சில பேர் தவறான முடிவை நோக்கி செல்வார்கள். அவர்களுக்கு ஒரு சிறிய ஊக்கமளிக்கும் தமிழ் கவிதை( motivation  quote in Tamil).

 
motivation quote in tamil

 

 

Motivation quote:

உன் வெற்றி என்பது உன்னை

இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்வது

ஆனால், உன் தோல்வி என்பது உன்னை

உனக்கே அறிமுகம் செய்வது.

 

 வாழ்க்கையின் கடிகாரம்–motivation quote:

நம் அனைவருக்கும் நேரம் என்பது நம் வாழ்க்கையில் மிக முக்கியமானது.”காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது” என நம் முன்னோர்கள் ஒவ்வொரு வரியையும் அருமையான கருத்தோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டு கூறியுள்ளார்கள். நாம் ஒரு ஒரு நொடியையும் வீணாக்குவது கடிகாரத்தில் ஓடும் நேரத்தை அல்ல. நம் நம் வாழ்க்கையின் நொடியை.ஓரு சிறிய ஊக்கமளிக்கும் கவிதை.(Motivation quote in Tamil)..

motivation quote in tamil

 

 

Motivation quote–ஊக்கமளிக்கும் கவிதை:

உன் நேரத்தை வீணாக்கும் போது

கடிகாரத்தை பார்….!

அங்கே ஓடுவது  கடிகாரத்தின் முள் அல்ல

உன் வாழ்க்கையின் நொடிகள்…!

 

கடந்து போன வாழ்க்கை–motivational quotes:

நம் அனைவருக்கும் ஒவ்வொரு கடந்த கால நினைவுகள் கண்டிப்பாக இருக்கும். அது காதலாக இருக்கலாம் அல்லது நம் கண்முன்னே நடந்த கொடூரமாகவும் இருக்கலாம் மற்றும் நிறைய இருக்கலாம். எனவே கடந்து போனதை பற்றி நினைப்பது முட்டாள்தனம். நாம் நினைத்தாலும் அது மீண்டும் இயல்பான நிலைக்கு வராது. எனவே கடந்து போனதை நினைப்பதை விட்டு நடப்பதை யோசியுங்கள். உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் கடந்துபோன வாழ்க்கைக்கு எனவே ஒரு சிறிய ஊக்கமளிக்கும் கவிதை( motivation quote in Tamil).

motivation quote in tamil

 

 

Motivation quote–ஊக்கமளிக்கும் கவிதை:

உன் கடந்த காலத்தை பற்றி

கவலை கொள்ளாதே…!

அது உன் வாழ்க்கைக்கு 

கடுகளவும் கை கொடுக்காது…!

 

முயற்சி–motivation content:

முயற்சி என்பது நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று. முயற்சி செய்தால்தான் நாம் நினைக்கும் ஒவ்வொரு காரியங்களையும் நன்றாக செய்து முடிக்க முடியும். முயற்சி செய்யாமல் விட்டால்  நம்மால் எதுவும் செய்ய இயலாது. எனவே வெற்றியோ, தோல்வியோ முதலில் முயற்சி செய். உனக்கென்று ஒரு தனி தைரியம் வந்துவிடும். முயற்சியை பற்றி ஒரு சிறிய ஊக்கமளிக்கும் கவிதை( motivation quote in Tamil).

motivation quote in tamil

 

 

motivation quote–முயற்சி:

உன் வாழ்க்கையில் எப்போதும்

முயற்சி செய்ய தயங்காதே…!

முயலும்போது உன்னை

முட்கள் கூட முத்தம் இட தயங்காது…!

வெற்றி தோல்வி–motivation quote:

வெற்றி தோல்வி என்பது நம் வாழ்க்கையில் வந்து போகும் ஒரு இயல்பான விஷயம்தான். நீ வெற்றி பெற வேண்டும் என்றால் உன் இலக்கை அடைவதற்காக கடினமாக உழைக்க வேண்டும். அவ்வாறு உழைத்தால் உன் வெற்றியை தேடி நீ போகத் தேவையில்லை. உன் வெற்றி உன்னை தேடி வரும்.

தோல்வி என்பது வெற்றிக்கான முதல் அறிகுறியாகும். எனவே தோல்வியை கண்டு அச்சம் கொள்ளாதே. தோல்வியடைந்தாலும்  உன் இலக்கை நோக்கி செல் உன் வெற்றியின் பாதை உனக்கு தெரியவரும். வெற்றி தோல்வி பற்றி ஒரு சிறிய கவிதை(motivation quote in Tamil).

Business tricks

motivation quote in tamil

 

 

motivation quote:

உன் வாழ்க்கையில்

வெற்றிக்கும் தோல்விக்கும்

சிறு வேறுபாடு தான்

உன் கடமையை செய்தால் வெற்றி அடைவாய்

நீ கடமைக்கென செய்தாள் தோல்வி அடைவாய்.

 

வாழ்க்கை–Tamil motivation quote:

நம் வாழ்க்கையில் கடினமான நேரங்கள் மற்றம் சிக்கலான சூழ்நிலைகளில் பல ஏற்பட்டிருக்கும். அப்போது நாம் அந்த சூழ்நிலையை கண்டு பயப்படக்கூடாது. ஏனென்றால் உன் பயமே உன்னை முடக்கிவிடும், அதாவது உன் திறமையை வெளிக்காட்ட முடியாமல். எனவே கடினமான நேரங்களில் மனதை தளர விடாதே. அத்தகைய நேரம் தான் உன் வாழ்க்கையை உயர்த்தும் ஒளி உனக்காக காத்திருக்கும். இந்த வாழ்க்கைக்கு எனவே ஒரு சிறிய ஊக்கமளிக்கும் தமிழ் கவிதை(motivation quote in Tamil).

motivation quote in tamil

 

வாழ்க்கை கவிதை–motivation quote in Tamil:

உன் வாழ்க்கை கடினமானது என்று

அச்சம் கொள்ளாதே, ஏனென்றால் 

அங்கேதான் உன் வாழ்க்கையை உயர்த்தும் 

ஒளி உன்னை எதிர்பார்த்து காத்திருக்கும்.

உன் வாழ்க்கையின் வெற்றி–motivation quote in Tamil:

நம் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்து இருப்போம். அந்த வெற்றியின் போது நம் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நமக்கு நேர்ந்த பல தோல்விகளும் இருக்கும். எனவே வெற்றியை கொண்டாடும் போது உன் தோல்வியை  நினைத்துக்கொள். உன்னை யாராலும் கீழே தள்ள  முடியாது, உன்னை வெல்லவும் முடியாது. ஒரு சிறிய ஊக்கமளிக்கும் தமிழ் கவிதை(motivation quote in Tamil).

motivation quote in tamil

 

Motivation quotes in Tamil: 

உன் வாழ்க்கையில் நீ வெற்றிபெறும் போதெல்லாம்

உன் தோல்வி உன்

நினைவில் வந்தாள் உன்னை

எவராலும் வெல்லவும் முடியாது,

உன்னை கீழே தள்ளவும் முடியாது.

 Motivation quotes in Tamil:

உன் வாழ்க்கையில் உனக்கென

ஒரு பாதியை நீயே தேர்ந்துகொள்

அப்பாதையில் நடக்கவும் கற்றுக்கொள்

ஏனென்றால், உன் கால்களை கொண்டு

வேறு எவராலும் நடக்க முடியாது.

நம்பிக்கை–motivation quote in Tamil:

 நம் அனைவரிடமும் நம்பிக்கை கட்டாயமாக இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் தான், நம் நினைத்த செயல்களை சுலபமாக செய்து முடிக்க முடியும். நம்பிக்கை இல்லையெனில் நாம் செய்யும் எந்த ஒரு செயலும் நம்மால் முழுமையாக செய்து முடிக்க முடியாது. நம் நம்பிக்கையோடு செய்தாள் வெற்றி நாம் வெற்றியை அடைய முடியும். ஒரு சிறிய ஊக்கமளிக்கும் தமிழ் கவிதை(motivation quote in Tamil).

motivation quote in Tamil.

 

Motivation quotes in Tamil:

 உன் நம்பிக்கை என்பது உன்

வெற்றியோடு வரும், ஆனால்

வெற்றி என்பது நம்பிக்கை

உள்ளவரிடம் மட்டும்தான் வரும்.

 Motivation quotes in Tamil:

 என் வாழ்க்கையில் எட்டிப் பிடிக்கும்

தூரத்தில் என் வெற்றியில்லை. 

அதேபோல் வெற்றியை விட்டுவிடும் 

எண்ணத்தின் நானும் இல்லை.

கஷ்டங்களுக்கு என ஒரு ஊக்கமளிக்கும் கவிதை–motivation quotes in Tamil:

motivation quote in Tamil.

 

நம் வாழ்க்கையில் கஷ்டங்கள்

மட்டும் இல்லையென்றால்

நமக்கு போராடும் எண்ணமே

இல்லாமல் போய்விடும், எனவே

உன் கஷ்டத்தை பாராமல்

உன் பாதையை நோக்கி செல்

உன் கஷ்டம் காற்றில் கலந்துவிடும்.

Motivation quotes in Tamil:

இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை

அவ்வாறு எதுவும் நிரந்தரம்

இல்லாத போது, உன் கஷ்டங்கள்

மட்டும் எவ்வாறு நிரந்தரமாகும்.

 

Motivation quotes in Tamil: 

உன் கவலைகள் ஒரு போதும்

உனக்கு வெற்றியை தரப்போவதில்லை

உன் வெற்றியை உனக்கு தருவதற்கு

முழு காரணம் உன் முயற்சிகளே.

Motivation quotes in Tamil:

உன் வாழ்க்கையில் பல சுமைகளை

உன்மேல் வைக்கலாம். எனவே

அந்த சுமைகளை கண்டு நீ

துவண்டு விடாதே, உன்னை தாங்கும்

இந்த பூமியே உன் காலடியில் தான்.

 

Motivation quotes in Tamil:

உன்னதமான ஒவ்வொரு வேலைகளும்

முதலில் நம்மால் முடியாததாக தான்

நமக்கு தோன்றும், பின் அந்த வேலையை

முழுமனதுடன் செய்யத் தொடங்கினாள்

எந்த ஒரு வேலையும் சுலபம்தான்.

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here