தேங்காய் எண்ணெய் நன்மைகள்/ coconut oil benefits best tips.

0
618

நம் வீட்டில் மிகவும் எளிமையாக இருக்கக்கூடிய பொருள் என்றாள் அது தேங்காய் எண்ணெய் தான். தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கும், சருமத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தேங்காய் எண்ணெய் நம் அன்றாட உண்ணும் உணவில் சேர்த்தால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?coconut oilலில் பல வகையான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன. இப்பதியில் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குறிப்புகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

நோய்களை குணப்படுத்த தேங்காய் எண்ணெய்:

coconut oil benefits

தேங்காய் எண்ணெயில் இருக்கின்ற மீடியம் செயின்ட்ரை, களிசரைட் என்னும் பொருள் நம் உடலிலுள்ள கல்லீரலை சென்றடைகிறது. இந்த பொருள் கல்லீரலுக்கு சென்று (ketone body) என்னும் வேதிப்பொருளை உருவாக்குகிறது. இந்த (ketone body) என்னும் வேதிப்பொருள் நம் உடலில் உருவாகுவதால் வலிப்பு நோயை சரி செய்கிறது, அல்சர் நோயை சரி செய்கிறது மன நோய்களையும் சரி செய்ய உதவுகிறது.

இதயத்தை பாதுகாக்க- தேங்காய் எண்ணெயின் பயன்கள்:

தேங்காய் எண்ணெய் நம் இதயத்தை பாதுகாப்பதற்கு உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகளை நம் உடலில் சேர்க்க விடாமல் பாதுகாத்து HDL இன்னும் நல்ல கொழுப்புகளை நம் உடலில் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

சிறுநீரக நோய்- coconut oil benefits:

தேங்காய் எண்ணெய் நம் உடலில் சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. இருப்பினும் தேங்காய் எண்ணெயில் சமைக்கப்படும் உணவுகளை உட்கொண்டால் நம் உடலில் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.

உடல் எடை குறைய- coconut oil uses:

தேங்காய் எண்ணெய் நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் நம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும்.

வாய் துர்நாற்றம் நீக்க- coconut oil benefits:

தேங்காய் எண்ணையை நம் வாயில் தினமும் ஊற்றி நன்கு கொப்பளிப்பதன் மூலம் (oil pulling) வாய் துர்நாற்றம், பல் சொத்தை, ஈறுகள் பிரச்சனை போன்றவற்றை சரி செய்ய முடியும்.

சருமத்திற்கு- தேங்காய் எண்ணெய் பயன்கள்:

தேங்காய் எண்ணெயில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நம் சருமத்தில் இருக்கும் கிருமிகளை போக்குவதற்கும், முக சுருக்கங்களை சரி செய்ய உதவுகிறது. கோடைகாலங்களில் சரும பிரச்சனைகளை தடுப்பதற்கு நம் உடலிலுள்ள தோலின் மேல் தேங்காய் எண்ணெய் தடவி வரலாம்.

தலைமுடி- coconut oil uses:

நம் தலையில் பொடுகு தொல்லை, இளம் வயதில் ஏற்படும் நரை முடிகள், பேன் தொல்லைகள் போன்றவற்றை சரி செய்யவும் நம் தலைமுடி நன்றாக வளர்வதற்கு உதவுகிறது.

READ MORE: முடி வளர்ச்சி அடைய குறிப்புகள்

உடல் சூட்டை தணிக்க- தேங்காய் எண்ணெய் பயன்கள்:

நம் உடலில் ஏற்படும் சூட்டை தணிக்க தேங்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் நம் உடலில் உஷ்ணம் நீங்குவதோடு நம் கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

தேங்காய் எண்ணெய் பயன்கள்- coconut oil uses:

கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக இயற்கையான முறையில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது நம் வீட்டில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. கேரளா மாநிலங்களில் தேங்காய் எண்ணையில் சமைக்கப்பட்ட உணவுகள் மட்டும் தான் பயன்படுத்தி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here