கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள்/ Best Neerkatti symptoms in Tamil:

0
635

கர்ப்பப்பை நீர்க்கட்டி அறிகுறிகள்/ Neerkatti symptoms:

கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள் Neerkatti symptoms

பெண்களுக்கு தாய்மை என்னும் உணர்வை கொடுப்பது அவர்களின் உடலில் இருக்கும் கர்ப்பப்பை ஆகும். ஆனால் இப்போது இருக்கின்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையினால் பெரும்பாலான பெண்களுக்கு அவர்களின் கருப்பையில் கட்டி உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றது. மாதவிடாய் சுழற்சி சரியான நேரத்தில் நிகழாமல் இருப்பதனால், சினைமுட்டைகள் வெளியில் வர முடியவில்லை. ஆகையால் கருப்பை கட்டிகள் உருவாவதற்கு பெரும் காரணமாக இருக்கின்றது. வாருங்கள் நாம் இப்பதியில் கருப்பைகட்டிகள்  உருவாகுவதற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்.

கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள்:

இக் கட்டிகளில் முக்கியமான ஐந்து வகையான கட்டிகள் உள்ளன அவை:

1) நார்த்திசு கருப்பை கட்டிகள்.

2) அடினோமைசிஸ் கருப்பைகட்டிகள்.

3) பாலிப்ஸ் கருப்பைகட்டிகள்.

4) கர்ப்பப்பை புற்றுநோய் கட்டிகள்.

5) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கட்டிகள்.

அதிகமான உதிரப்போக்கு/ neerkatti symptoms in Tamil:

நார்த்திசுக்கட்டிகள் பெரும்பாலான பெண்களுக்கு மட்டும் வருகின்றது. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வழக்கத்தைவிட அதிகமான உதிரபோக்கு அல்லது அதிகமான நாட்கள் உதிரபோக்கு போன்றவை ஏற்படலாம்.

இதில் திருமணமான பெண்களுக்கு உடலுறவு கொள்ளும்போது அந்த நேரத்தில் ரத்த கசிவு ஏற்படலாம்.மாதவிடாய் முடிந்து 40-50 பெண்களுக்கு மீண்டும் உதிரப்போக்கு ஏற்படலாம். அது அவர்களின் கருப்பையில் கட்டி இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

வலி/ neerkatti symptoms:

இந்த கட்டிகள் பெண்களின் வயிற்றில் இருப்பதால், வயிற்றின் அடிப்பகுதியில், முதுகில், இடுப்பில் வலி ஏற்படும். சில பெண்களுக்கு உடலுறவு கொள்ளும்போது அந்நேரத்தில் வலி ஏற்படும்.

கர்ப்பத்தடை/ கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள்:

பெண்களின் கருப்பையில் கட்டிகள் இருந்தால் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும். அல்லது சில பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பது முடியாமலும் போகலாம்.

கர்ப்பம் தரித்து பெண்களுக்கு கரு கலையும் நிகழ்வு ஏற்படலாம், குறைமாத பிரசவம், குழந்தை சரியாக வளர்ச்சி அடையாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்படும்.

இரத்தசோகை சிறுநீர் பிரச்சனை:

மாதவிடாய் சமயத்தில் அதிக உதிரபோக்கு ஏற்பட்டால் இரத்த சோகை ஏற்படும். சிறுநீர் சம்பந்தமான பிரச்சினைகள், அதாவது சிறுநீர் கழிக்கும் போது சிரமம், சிறுநீர் வரும்போது இரத்தம் வெளிவருவது போன்றவை கருப்பையில் கட்டிகள்  இருப்பதற்கான அறிகுறிகள்.

உடல் எடை குறைதல்/ neerkatti symptoms:

மலச்சிக்கல், வழக்கத்தை விட அதிக உடல் எடை குறைவு, பசியின்மை போன்றவை ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி இப்பிரச்சனையை சரிசெய்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here